×

லாரி டிரைவரை தாக்கிய போக்குவரத்து போலீஸ்காரர் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

ஓசூர், அக்.29: ஓசூர் சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி பகுதியில், லாரி டிரைவர் ஒருவர் மீது, ஓசூர் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இது குறித்த வீடியோவை அந்த வழியாக காரில் சென்ற, ஒருவர் எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மது போதையில் லாரி டிரைவர் மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் வந்ததாகவும், லாரி டிரைவரை நிற்க சொல்லியும் நிற்காததால், அவர் மீது போக்குவரத்து போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி டிரைவரை தாக்கிய போக்குவரத்து போலீஸ்காரர் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Jujuwadi ,Sibgad ,Dinakaran ,
× RELATED ஓசூர் ஜூஜூவாடியில் வைக்கோல் ஏற்றி...