×

வீட்டில் புகுந்த நல்லபாம்பு மீட்பு

ஊத்தங்கரை, அக்.29: ஊத்தங்கரை காமராஜர் நகரை சேர்ந்தவர் ரவிகாந்த். அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவருக்கு சொந்தமான கீழ் வீட்டை, வாடகைக்கு விட்டு விட்டு மேல் வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இந்நிலையில், கீழ் வீட்டில் 2 அடி நீள நல்லபாம்பு ஒன்று, நேற்று புகுந்து படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த குழந்தைகள் சத்தம் போட்டுள்ளனர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் அந்தோணிசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் புகுந்த பாம்பை மீட்டு, ஒன்னகரை வனப்பகுதியில் விட்டனர்.

The post வீட்டில் புகுந்த நல்லபாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Tags : Oodhangarai ,Ravikant ,Oodhangarai Kamaraj Nagar ,Dinakaran ,
× RELATED திருமணமான இளம்பெண் மாயம்