பெங்களூரு போலீஸ் விசாரணை பிரபல டைரக்டர் மீது ஓரின சேர்க்கை புகார்

பெங்களூரு: மலையாள திரைப்பட இயக்குனர் ரஞ்சித் பாலகிருஷ்ணனுக்கு எதிரான ஓரின சேர்க்கை புகார் குறித்து பெங்களூரு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மலையாள திரைப்பட இயக்குனர் ரஞ்சித் பாலகிருஷ்ணன், கதை விவாதத்தின்போது தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, வங்க மொழி திரைப்பட நடிகை ஸ்ரீலேகா மித்ரா சமீபத்தில் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை ரஞ்சித் மறுத்தபோதும், கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். இந்நிலையில், ரஞ்சித் மீது 31 வயது ஆண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கூறி, மலையாள திரையுலகில் மீண்டும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளார். கடந்த 2012ல், பெங்களூருவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்தபோது மது போதையில் ஆழ்த்தி தன்னுடன் ஓரின சேர்க்கையில் ரஞ்சித் பாலகிருஷ்ணன் ஈடுபட்டதாக அந்த நபர் புகார் கூறியுள்ளார். இது குறித்து, பெங்களூரு மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பெங்களூரு போலீஸ் விசாரணை பிரபல டைரக்டர் மீது ஓரின சேர்க்கை புகார் appeared first on Dinakaran.

Related Stories: