கீழடி 10ம் கட்ட அகழாய்வு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு: 11ம் கட்டப்பணிகள் 2025 மே மாதம் துவங்கும்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கியது. வழக்கமாக, அகழாய்வுப் பணி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் துவங்கி செப்டம்பரில் முடிக்கப்படும். ஆனால், தமிழக தொல்லியல் துறை ஜனவரி மாதம் துவங்க வேண்டிய ஆய்வை தாமதமாக ஜூன் மாதம் தொடக்கியது. இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு பாசி மற்றும் கண்ணாடி மணிகள், ‘தா’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியபட்டுள்ளன.

அகழாய்வில் ஒவ்வொரு நாளும் அரிய தொல் பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை 5 பெரிய பானை, 20க்கும் மேற்பட்ட சிறிய பானை என 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், செப்டம்பருடன் முடியவேண்டிய அகழாய்வு பணி 2025 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும், 11ம் கட்ட அகழாய்வு பணி மே 2025ல் தொடங்கும் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

The post கீழடி 10ம் கட்ட அகழாய்வு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு: 11ம் கட்டப்பணிகள் 2025 மே மாதம் துவங்கும் appeared first on Dinakaran.

Related Stories: