வெள்ளிங்கிரி மலையேற்ற விவகாரம் ஆன்மிக பயணத்திற்கு கட்டணம் இல்லை: கலெக்டர் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் வெள்ளிங்கிரி, டாப்சிலிப் உள்பட 7 இடங்களில் மலையேற்றம் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த ஒவ்வொரு மலையேற்றத்திற்கும் தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், வெள்ளிங்கிரியில் மலையேற்றம் செல்வதற்கு ரூ.5,099 கட்டணம் மற்றும் 5 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வெள்ளிங்கிரியில் உள்ள 7-வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மலையேறும் பக்தர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது இல்லை.

அறநிலையத்துறையின் மூலம் மலையேறும் பக்தர்களுக்கு மூங்கில் குச்சிகள் மட்டும் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில், வனத்துறை சார்பில் வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களிடமும் கட்டணம் வசூல் செய்யப்படும் என தகவல்கள் வேகமாக பரவியது.

ஆனால், வனத்துறை சார்பில் டிரெக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே கட்டணம் எனவும், ஆன்மிக பயணத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளிங்கிரி மலை ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

The post வெள்ளிங்கிரி மலையேற்ற விவகாரம் ஆன்மிக பயணத்திற்கு கட்டணம் இல்லை: கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: