குரு பூஜையையொட்டி டாஸ்மாக் மூடல்

சிவகங்கை, அக். 26: சிவகங்கை மாவட்டத்தில் மருதுபாண்டியர், தேவர் குரு பூஜையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காளையார்கோவிலில் நாளை (அக்.27) நடக்க உள்ள மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இன்று (அக்.26) மாலை 6 மணி முதல் நாளை முழுவதும் அடைக்கப்படும். நாளை மறுநாள் (அக்.28) அன்று கடைகள் வழக்கம் போல் செயல்படும். மீண்டும் தேவர் குருபூஜையையொட்டி அக்.29 மாலை 6 மணிக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. அக்.30 அன்று கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் அக்.31 முதல் கடைகள் திறக்கப்படும் என சிவககை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கூத்தலூர் மற்றும் பள்ளத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக ரூ.49.52 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கான கடன் உதவியை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார். அருகில், டிஆர்ஓ செல்வசுரபி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/ செயலாட்சியர் உமா மகேஸ்வரி, வேளாண் இணை இயக்குநர் லட்சுமிபிரபா, கலெக்டர் (வேளாண்மை) நேர்முக உதவியாளர் சுந்தர மகாலிங்கம்.

The post குரு பூஜையையொட்டி டாஸ்மாக் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: