கந்தர்வகோட்டையில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு

 

கந்தர்வகோட்டை,அக்.26: கந்தர்வகோட்டையில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகர் மற்றும் கிராமபுறங்களில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடிடவும். வடகிழக்கு பருவமழையில் எவ்வாறு நம்மை காத்து கொள்வது என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறை நிலைய பொறுப்பு அலுவலர்கள் சிவகுமார், அறிவழகன் ஆகியோர் விழிப்புணர்பு ஏற்படுத்தினர்.

அப்போழுது தீ விபத்து ஏற்பட்டால் தாமதம் செய்யாமல் 04322-275743 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். மேலும் கூரை வீட்டின் அருகில் வெடி வெடிக்ககூடாது, வெடி வெடிக்கும்போது வீட்டில் கதவு, ஜன்னல்களை மூடிவைக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும். எண்ணை சட்டி தீ பிடித்தல் தண்ணீர் கொண்டு அணைக்கமால் சாக்குபோட்டு அணைக்க வேண்டும் என்று செயல்முறை செய்து கண்பித்தனர். இந்த நிகழ்ச்சிகளை பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களித்தனர்.

The post கந்தர்வகோட்டையில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: