உடையார்பாளையம் வடக்கு அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

 

ஜெயங்கொண்டம், அக். 26: உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரி சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழக முதல்வரின் போதை ஒழிப்பு ஒளிப்படம் காண்பிக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை போதையின் பாதையில் செல்லாமல் எவ்வாறு கவனமாக வளர்க்க வேண்டும் என்று விரிவாக விளக்கிக் கூறினார். மேலும் போக்சோ சட்டம் பற்றி உடையார்பாளையம் காவல் நிலைய பெண் காவலர் வனிதா விளக்கி கூறினார்.

மாணவர்களை விளையாட்டில் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும், ஆகிய கருத்துக்கள் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டது. இறுதியில் உதவியாசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் வானதி, கார்த்திகேயன், மலர்கொடி, கனிமொழி ஆகியோர் செய்து இருந்தனர்.

The post உடையார்பாளையம் வடக்கு அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: