×

பிளஸ்2 மாணவி கடத்தல்

கிருஷ்ணகிரி, அக்.26: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை சின்னமேலுப்பள்ளி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதுபற்றி பெற்றோர் மகாராஜகடை போலீசில் புகார் அளித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த சூர்யா(24) என்பவர், திருமண ஆசை காட்டி தங்கள் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்றும், அவரிடமிருந்து மகளை மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிளஸ்2 மாணவி கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Maharajagadai Chinnamelupalli ,Krishnagiri district ,Parkur ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் புத்தாண்டையொட்டி...