×

காவல் நிலையங்களில் எஸ்பி திடீர் ஆய்வு

ஊத்தங்கரை, அக்.26: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவர் காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார். கோப்புகள் மற்றும் வழக்குகள் நிலுவை விவரங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன் உடனிருந்தார்.

The post காவல் நிலையங்களில் எஸ்பி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : SP ,Uthangarai ,Krishnagiri District ,SP Thangadurai ,Singarappettai ,station ,Dinakaran ,
× RELATED எஸ்பி அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு...