7 நகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு ஆய்வாளர்களுக்கு பயிற்சி முகாம் திருமங்கலத்தில் நடைபெற்றது

திருமங்கலம், அக் 25: ஏழு நகராட்சியை சேர்ந்த 34 துப்பரவு ஆய்வாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்களுக்கு கழிவு சுத்திகரிப்பு மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் திருமங்கலம் நகராட்சியில் நடைபெற்றது. மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, கம்பம், பரமக்குடி, கூடலூர், கீழக்கரை, முதுகுளத்தூர் உள்ளிட்ட நகராட்சிகளில் கசடு, கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. இதில் திருமங்கலம் நகராட்சியை தவிர்த்து, மற்ற ஏழு நகராட்சிகளிலும் இந்த திட்டம் செயல்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து பிற நகராட்சிகளில் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, திருமங்கலம் நகராட்சியில் கசடு, கழிவு சுத்திகரிப்பு மேலாண்மை குறித்து பயிற்சி சிறப்பு முகாம் நடைபெற்றது. 3நகராட்சிக்கு சொந்தமான வடகரை புல்பண்ணையில் உள்ள சுத்தகரிப்பு நிலையத்தினை இந்த ஏழு நகராட்சிகளை சேர்ந்த துப்புரவு ஆய்வாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் பார்வையிட்டனர். அங்கு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். தொடர்ந்து திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாமில், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ரத்தினவேல். சுகாதார அலுவலர் சண்முகவேல், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் ஆகியோர் கசடு கழிவு சுத்திகரிப்பு மையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

The post 7 நகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு ஆய்வாளர்களுக்கு பயிற்சி முகாம் திருமங்கலத்தில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Related Stories: