×

கற்கள் கடத்திய லாரி பறிமுதல் டிரைவருக்கு வலை

கிருஷ்ணகிரி, அக்.25: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த நாகமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ரத்தினவேல் மற்றும் அதிகாரிகள், கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது முத்தனஅள்ளி பஸ் ஸ்டாப் அருகே கேட்பாரற்று நின்றிருந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் ₹7 ஆயிரம் மதிப்பிலான உடை கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கற்களுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விஏஓ கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, லாரியின் உரிமையாளரான ராயக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்த சக்திவேல்(36) மற்றும் டிரைவரான நெருப்புகுட்டை மாதேஷ்(21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

The post கற்கள் கடத்திய லாரி பறிமுதல் டிரைவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri District, Kelamangalam ,Nagamangalam ,Village Administrative Officer ,Rathinavel ,Kelamangalam-Rayakottai road ,Muthanaalli ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி நகரில் புத்தாண்டையொட்டி...