×

மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டியில் கோவை மாணவர்கள் 24 தங்கப்பதக்கம் வென்றனர்

கோவை, அக்.25: இரண்டாவது மாநில அளவிலான சிலம்பம், கராத்தே, குங்பூ ,யோகா சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஐசிஎப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கோவை மாவட்டம் சார்பாக ரவுத்திரா அகாடமியை சேர்ந்த 48 மாணவர்கள் சிலம்பம் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கொம்பு, மான் கொம்பு, தொடுமுறை போட்டி மற்றும் யோகா போட்டிகளில் கலந்து கொண்டுனர்.

இதில் ஒற்றைக் கொம்பு பிரிவில் 11 தங்கம், 8 வெள்ளி, 12 வெண்கலம் மற்றும் இரட்டைக் கொம்பு பிரிவில் 5 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம், மான் கொம்பு பிரிவில் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம், தொடு முறை பிரிவில் 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கமும் வென்றனர். அதேபோல, யோகா போட்டியில் 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் உள்பட மொத்தம் 24 தங்கம், 18 வெள்ளி, 24 வெண்கலப்பதக்கங்கள் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டிக்கு தகுதி பெற்று நமது கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

The post மாநில அளவிலான சிலம்பம், யோகா போட்டியில் கோவை மாணவர்கள் 24 தங்கப்பதக்கம் வென்றனர் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Silambam ,Championship ,Chennai ICF Indoor Stadium ,Rauthra Academy ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டி