×

சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியில் தீபாவளி விற்பனை விழா

கோவை, அக். 25: கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் தீபாவளி விற்பனை விழா நேற்று துவங்கியது. இந்த விழா உள்ளூர் வணிகர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், ஆடைகள், சிறுமுகை பட்டுகள், அலங்கார மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள், கைவினை பொருட்கள் மற்றும் அறுசுவை உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், 90-களின் இனிப்புகளை விற்கும் சிறப்பு ஸ்டால் இடம்பெற்றுள்ளது. இந்த விற்பனை விழா கல்லூரி வளாகத்தில் நாளை (26ம் தேதி) வரை நடக்கிறது. அனுமதி இலவசம். தினமும் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை விற்பனையானது நடக்கிறது. கூடுதல் தகவலுக்கு 99409-03886 என்ற எண்ணை ெதாடர்பு கொள்ளலாம்.

The post சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரியில் தீபாவளி விற்பனை விழா appeared first on Dinakaran.

Tags : Sardar Vallabhbhai Patel College ,Coimbatore ,Diwali Sale ,Sardar Vallabhbhai Patel International College of Textiles and Management ,Beelamet ,
× RELATED நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை...