ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை: சென்னை கோட்ட ரயில்வே தகவல்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுக்கிறது. பட்டாசுகள், தீப்பற்றக்கூடிய பொருட்களில் உள்ள ரசாயன கலவை ஒரு சிறிய தீப்பொறியால் கூட பற்ற வைக்கப்படலாம், இது ரயில்வே சொத்துகளுக்கு மட்டுமல்லாமல், பயணிகளின் விலைமதிப்பற்ற உயிர்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு மற்றும் பிற அபாயகரமான பொருட்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, சென்னை கோட்டத்தில் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன:
* முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு, கூடுதல் பாதுகாப்பிற்காக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
* பட்டாசுகளை எடுத்துச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு, ரயில் நிலையங்களில் ஆர்பிஎப் குழுவால் நடத்தப்படுகிறது.
* ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 67, 164 மற்றும் 165ன் படி, ரயில்வேயில் எரியக்கூடிய மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும், மேலும் ரூ.1000 அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். மேலும் இழப்பு/காயம் அல்லது இதனால் ஏற்படும் சேதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டு சிறை: சென்னை கோட்ட ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Related Stories: