சீலைக்காரி அம்மன் கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிவகாசி, அக்.24: சிவகாசி அருகே கம்மாபட்டி சீலைக்காரி அம்மன் கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. சிவகாசி அருகே மங்களம், கம்மாபட்டியில் சீலைக்காரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று கடந்த மாதம் 15ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 48 நாட்களும் கோயில் திறந்து வைக்கப்பட்டு, தினந்தோறும் அபிஷேகங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று 48வது நாள் விழாவை முன்னிட்டு மண்டல பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

அம்மனுக்கு பால், பழம், தயிர், வெண்ணெய், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜையில் எம்.டி.வி.ஏ. குரூப் ஆப் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் தங்கமுனியசாமி, சிவகாசி மாநகர திமுக கவுன்சிலரும் மாநகர 1வது பகுதி கழக செயலாளருமான அ.செல்வம், கோயில் நிர்வாக கமிட்டியாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, முனியசாமி, முருகன், மாரியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சீலைக்காரி அம்மன் கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: