ஆதிதிராவிடர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

 

திருப்பூர், ஜன.10: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வழியே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சேர்ந்து பயில 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற் பயிற்சி, பட்டய படிப்பு மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி முடித்த உடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம். மேலும், தகவல்களை 94450 29552, 0421-2971112 எண்களில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

The post ஆதிதிராவிடர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: