பஸ் நிலையம் நாளை திறப்பு

அரூர், அக்.23:அரூரில் ₹3.63 கோடி மதிப்பில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டது. முன்பிருந்த பஸ் நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டது. இதையடுத்து, அங்கு புதிதாக 30 கடைகள் கட்டப்பட்டு பஸ் நிலையம் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. நாளை (24ம்தேதி) மாலை 5 மணியளவில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பஸ் நிலையத்தை திறந்துவைக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி எம்பி மணி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி, புதிய பஸ் நிலைய திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி துணை தலைவர் சூர்யா தனபால், நகர செயலாளர் முல்லைரவி ஆகியோர் உடனிருந்தனர்.

The post பஸ் நிலையம் நாளை திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: