ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பட்டாசு கடைகள் அக்.26ம் தேதி துவக்கம்

 

ஈரோடு, அக். 23: ஈரோடு மாவட்டத்தில் போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை வருகிற 26ம் தேதி தொடங்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக காவலர் நல அங்காடி (போலீஸ் கேண்டீன்) சார்பில் பட்டாசு கடை அமைக்கப்படும். அதன்படி, நடப்பாண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்பேரில் ஈரோடு எஸ்பி அலுவலகத்தின் போலீஸ் கேண்டீன், ஈரோடு ஆயுதப்படை வளாகம், கோபி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் 4 இடங்களில் பட்டாசு கடை வருகிற 26ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,“மாவட்ட வருவாய் துறை, தீயணைப்பு துறையின் அனுமதி பெற்று தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடை அமைக்க, தேவையான பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ‘கிப்ட் பாக்ஸ்’ எனப்படும் பட்டாசு பெட்டிகள் தான். இதனை போலீசார் மட்டும் அல்லாமல் பொதுமக்களும் வாங்கி கொள்ளலாம். இந்த விற்பனையை ஆயுதப்படை போலீசார் மேற்கொள்வர்’’ என்றனர்.

The post ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பட்டாசு கடைகள் அக்.26ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: