காவலர் வீர வணக்க நாள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில்

திருவண்ணாமலை, அக்.22: காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் மலர் வைத்து எஸ்பி சுதாகர் மரியாதை செலுத்தினார். கடந்த 1959ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவ தாக்குதலில் வீர மரணம் அடைந்த எல்லை பாதுகாப்பு வீரர்களின் நினைவாக, ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீர வணக்க நாள் அணுசரிக்கப்படுகிறது. அப்போது, நாடு முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள காவலர் நினைவு சின்னத்துக்கு, எஸ்பி சுதாகர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், 108 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், கலால் பிரிவு டிஎஸ்பி அண்ணாதுரை, ஆயுதப்படை டிஎஸ்பி மணிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post காவலர் வீர வணக்க நாள் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் appeared first on Dinakaran.

Related Stories: