மரக்காணம் பகுதியில் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் கடல் அலைகள்: பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்

மரக்காணம்: தமிழக பகுதியில் வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டு உள்ளது. இதுபோல் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இதன் காரணமாக கடலில் மாறுபட்ட நீரோட்டம் மற்றும் இயற்கை மாற்றங்கள் தினம், தினம் மாறுபடுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். இதுபோல் பருவமழையின்போது கடல் பரப்பில் மட்டுமல்லாமல் வானில் கூட வானவில் தோன்றுதல் மற்றும் இயற்கை அழகுகளுடன் கூடிய பல்வேறு வர்ணஜாலங்களும் காணப்படும்.

இந்த இயற்கை அழகை பொதுமக்களும் மகிழ்ச்சியோடு கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மரக்காணம் பகுதி கடலில் திடீரென நீல நிறத்தில் காணப்பட்டது. இந்த இயற்கை அழகை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிலையில் மீண்டும் இன்று காலையில் மரக்காணம் பகுதி கடல் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்களும் கடற்கரைக்கு சென்று பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் கடல் தண்ணீரை பார்த்து ரசித்து வருகின்றனர். இதுபோல் நேற்று புதுவையில் உள்ள கடல் நீர் பகிலில் பச்சை நிறத்திலும், இரவில் நீல நிறத்திலும் காணப்பட்டது.

The post மரக்காணம் பகுதியில் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் கடல் அலைகள்: பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: