ரேஷன் பொருட்களுடன் பள்ளத்தில் சிக்கிய லாரி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில், பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம், தர்காஸ், பாண்டூர், அண்ணா நகர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பெருமாட்டுநல்லூரில் உள்ள ரேஷன் கடைக்கு செங்கல்பட்டில் இருந்து லாரி மூலம் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் ஏற்றி கொண்டு சென்றது.

மேற்படி ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை இறக்கி வைத்து விட்டு அங்கிருந்து சிறிது தூரம் சென்ற லாரி பின் பக்கமாக சென்று மீண்டும் கூடுவாஞ்சேரி நோக்கி செல்வதற்காக லாரியை எடுத்துக் கொண்டு டிரைவர் புறப்பட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக லாரி சாலையோர பள்ளத்தில் தாழ்வான நிலையில் சாய்ந்து அங்கு நட்டு வைக்கப்பட்டிருந்த கற்கள் மீது மோதி நின்றது.

இதனை கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து உடனே பொக்லைன் இயந்திரத்தை வரவைத்து அதன் மூலம் லாரியை தூக்கி நிறுத்தி எடுத்தனர். இதில், லாரியில் இருந்த லாரி டிரைவர், கிளீனர் மற்றும் ஊழியர்கள் உட்பட ரேஷன் பொருட்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ரேஷன் பொருட்களுடன் பள்ளத்தில் சிக்கிய லாரி appeared first on Dinakaran.

Related Stories: