ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு

சென்னை: ராணுவப் பள்ளிகளில் தகுதியுள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கப் போவதாக ராணுவப் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ராணுவப் பப்ளிக் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக 1983-ல் தொடங்கப்பட்ட ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பு ஆகும். நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ளிகளும் 249 மழலையர் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். இந்த பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தொடக்க கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருப்பதுடன் பி.எட். படித்திருக்க வேண்டும். வணிகவியல், உயிரியல், உயிரி தொழில் நுட்பம், வர்த்தக கல்வி, வேதியியல், கணினி அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம், மனையியல், தகவல் பயிற்சி, கணக்கு, உடற்கல்வி, அரசியல் அறிவியல், உளவியல் போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று, பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் இளநிலைப் பட்டம் பட்டம் பெற்றிருப்பதுடன் B.Ed. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் கணினி அறிவியல், ஆங்கிலம், இந்தி, கணக்கு, உடற்கல்வி, சமஸ்கிருதம், அறிவியல், போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் பயிற்சி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ராணுவப் பள்ளிகளின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: