கர்ப்பிணிகள், முதியோர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம்: தவெக தலைவர் விஜய் திடீர் அறிக்கை

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் நடக்கிறது. இந்நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: அரசியல் களத்தில் வாய்மொழி வித்தை காட்டுவது நம் வேலை அன்று. செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி.

மாநாட்டு களப்பணிகளில் மட்டுமின்றி, நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எல்லோரையும் போலவே கர்ப்பிணி பெண்கள், பள்ளி சிறுவர்-சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து மாநாட்டுக்கு வர திட்டமிட்டு இருப்பார்கள்.

மாநாட்டுக்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வரவேண்டாம். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக்கொள்கை திருவிழாவில் கலந்துகொள்ளலாம். மாநாட்டுக்கு வரும் மற்ற அனைவரும் மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிகமிக முக்கியம். அதுபோல் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

The post கர்ப்பிணிகள், முதியோர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம்: தவெக தலைவர் விஜய் திடீர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: