இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரவே செய்யும்: துணை முதல்வர் உதயநிதி கடும் தாக்கு

சென்னை: இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது.

அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வுதான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல ‘சரி’ வலம்! ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு திருப்பணி செய்தவர் எங்கள் முதல்வர்! ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளை பார்த்தால், மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

நியாயம் தானே…! நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி.தமிழை’ப்போல்-அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரவே செய்யும்: துணை முதல்வர் உதயநிதி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: