சின்னவெங்காயம் விற்பனைக்காக கேரளா தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெரம்பலூர், ஜன. 1: பெரம்பலூர் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சின்னவெங்காயம் விற்பனைக்காக (ஏற்றுமதி) கேரளா தோட்டக்கலை பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்துடன் (Kerala State Horticulture Product Development Corporation) மாவட்டக் கலெக்டரின் சீர்மிகு வழிகாட்டுதலின் படி, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சின்னவெங்காயம் விற்பனைக்காக (ஏற்றுமதி) கேரள மாநிலத்தில் உள்ள கேரளா தோட்டக்கலை பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்துடன் (Kerala State Horticulture Product Development Corporation) சப். கலெக்டர் கோகுல் முன் னிலையில், பெரம்பலூர் சின்னவெங்காயம் மற்றும் மக்காச்சோளம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ஆலத்தூர் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத் தியாளர் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கேரளா அரசின் HORTICORP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.பிரதீப் மற்றும் மண்டல மேலாளர் சஜீவ் ஆகியோருடன் நேற்று (31ஆம்தேதி) புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட்டது.

தமிழகத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் பிரதான மாவட்டமாக திகழக்கூடிய பெரம்பலூ ரில் 5,900 ஹெக்டேர் பரப்பில் சின்ன வெங்கா யம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுவை, ராபி, ராபி (சிறப்பு பருவம்) என மூன்று பருவங்களில் ஆல த்தூர் மற்றும் பெரம்பலூர் வட்டாரங்களில் அதிக அளவில் சின்ன வெங்கா யம் சாகுபடி செய்யப் படுகிறது. ராபி பருவத்தில் அதிக அளவில் பயிரிடப் பட்டு, அதிக மகசூல் பெறப்படுகிறது. ராபி பருவத்தில் சந்தைக்கு அதிக அளவில் சின்ன வெங்காயம் வரத்து இருப்ப தால், விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு அனுப் பும் நிலை உள்ளது. விவசா யிகள் மிகக் குறைந்த விலைக்கே அதாவது கிலோ ரூ10க்கு வியாபா ரிகளிடம் விற்பனை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவருகின்றனர்.

இந்நிலைமாறி, விவசாயி களுக்கு அதிக லாபம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கில், மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், ஏற் றுமதி பொருட்கள் ஊக்கு விப்புக் குழுக்கூட்டம் கடந்த 17ஆம்தேதி நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்திய தன் படி, கேரள அரசின் HORTICORP நிறுவனத் தோடு, பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள சின்ன வெங்காய உழவர் உற்பத் தியாளர் நிறுவனங்கள் சின்ன வெங்காயம் விற் பனை மேற்கொள்வதற் காக சப்.கலெக்டரின் முன் னிலையில் பெரம்பலூர் சின்னவெங்காயம் மற்றும் மக்காச்சோளம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ஆலத்தூர் கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத் தியாளர் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கேரளா அரசின் HORTICORP நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.பிரதீப் மற்றும் மண்டல மேலாளர் சஜீவ் ஆகியோருடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தானது.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங் காயம் உற்பத்தி செய்யக் கூடிய விவசாயிகள் நல்ல விலைக்கு தங்கள் விளை பொருளை விற்பனை செய் யக்கூடிய சூழல் மாவட்டக் கலெக்டரின் நடவடிக் கைகளால் உருவாக்கப்ப ட்டுள்ளது. இந்த ஒப்பந்தங் களால் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். இந்நிகழ்வில், வேளாண்மை துணை இயக்குநர்(வே.வ) எஸ் எஸ்தர் பிரேமகுமாரி, வேளாண்மை அலுவலர் (வே.வ) செண்பகம், வேளாண்மை அலுவலர் (உ.ச) நாகராஜன், உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்கு நர்கள் ஆகியோர் உடனிரு ந்தனர்.

The post சின்னவெங்காயம் விற்பனைக்காக கேரளா தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: