பெரம்பலூர்,டிச.31: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.5000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டும் என இந்திய தொழிலாளர் கட்சியினர் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (30ஆம் தேதி) திங்கட் கிழமை காலை பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இந்தியத் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் திரண்டு வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் பொங்கல் கொண்டாடிட தமிழக அரசு நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, ஒரு நபருக்கு ரூபாய் ஐந்தாயிரம் விதம் தொகையாகவும், பொங்கல் பொருட்களான அரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு மற்றும் பொங்கல் வைப்பதற்கான மண் பானை உள்ளிட்டவைக ளோடு தொழிலாளர்களுக்கு வேட்டி துண்டு சேலை உட்பட அனைத்தும் பொங்கல் தொகுப்பு பரிசாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் என அந்த கோரிக்கை முடிவில் தெரிவித்துள்ளனர்.
The post அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.5000: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.