பெரம்பலூர்,டிச.31: பெரம்பலூர் மாவட்டம் “புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்” மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 884 மாணவிகள் பயனடைய உள்ளனர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டம், காமராஜர் கல்லூரியில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கும் “புதுமைப்பெண்” விரிவாக்க திட்டத்தினை நேற்று (30ஆம்தேதி) தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்வினை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கிலிருந்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி எம்பி கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேரலை யில் பார்வையிட்டு மாதந் தோறும் ரூ1,000 பெறும் வகையிலான வங்கி கணக்கு பற்று அட்டைகளை 884 மாணவிகளுக்கு வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் உயர்கல்வியை நனவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் குறிப்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தை கடந்த 2022 செப்.5 ஆம் தேதி துவங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 4,566 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். உயர்கல்வி பயிலும் மாணவிகள் மட்டும் மாதந்தோறும் ரூ1,000 பெற்று வந்த நிலையில், அரசுப்பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவர்களு க்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” என்ற சிறப்பான திட்டத்தை 2024 ஆக.9 அன்று கோவை அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் 5,099 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், புதுமைப்பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டும் ரூ1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இத் திட்டமானது விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் “புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம்” தமிழ் நாடு முதலமைச்சரால் நேற்று (30ஆம்தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் வாயிலாக பெரம்பலூர் மாவட்டத்தில் 884 மாணவி கள் பயனடைய உள்ளனர்.
இத்திட்டமானது கல்லூரி செல்லும் மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஏற்ப டுத்துவதாகவும், அவர்க ளுக்கு புத்தகங்கள், குறிப்பேடுகள் வாங்குவது உள் ளிட்ட கல்வி தொடர்பான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதந் தோறும் ரூ.1,000 பேருதவியாக உள்ளது. மேலும் தமிழகத்தில் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களினால் உயர் கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோன்ற திட்டங்களை மாணவ, மாணவியர் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில், அமைக்கப் பட்டிருந்த நடமாடும் பணம் எடுக்கும் இயந்திர வாகனத்தில் மாணவியர் தங்களுக்கு வழங்கப்பட்ட பற்று அட்டைகளைப் பயன்படுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையில் மகிழ்ச்சியுடன் படம் எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சப்.கலெக்டர் கோகுல், பெரம்பலூர் நக ராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மீனா அண்ணாதுரை, இராமலிங்கம், மாவட்டஊராட்சி துணைத்தலைவர் முத்த மிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சி கவுன்சி லர்கள் தழுதாழை பாஸ்கர், மகாதேவி ஜெயபால், நக ராட்சி துணைத் தலைவர் ஆதவன், அட்மா தலைவர் ஜெகதீசன், சமூக நல அலுவலர்.ஜெய, உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர் கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்ட னர்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலம் 884 மாணவிகள் பயன் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 5,099 மாணவர்கள் உள்ளனர் appeared first on Dinakaran.