கிராம பஞ்சாயத்து தின கூலி ஊழியர்கள் 196 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

 

காரைக்கால்,அக்.19:உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் கிராம பஞ்சாயத்து தின கூலி ஊழியர்கள் 196 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்வரிடம் நாஜிம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் மற்றும் நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் ஆகியோர் நேற்று சட்டப்பேரவையில் நேரில் சந்தித்தனர்.

அப்போது முதல்வருடன் நாஜிம் எம்எல்ஏ பேசிய புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் கிராம பஞ்சாயத்து தின கூலி ஊழியர்கள் 196 பேரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். காரைக்கால் நகராட்சியில் வாரிசு அடிப்படையில் வேலைக்கு காத்திருக்கும் அத்தனை பேருக்கும் நகராட்சியில் பணி வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக முதல்வர் ரங்கசாமி உறுதி கூறினார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் உடன் இருந்தார்.

The post கிராம பஞ்சாயத்து தின கூலி ஊழியர்கள் 196 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: