தேனி அருகே வெங்கடாசலபுரத்தில் பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டி

தேனி, அக். 19: தேனி அருகே வெங்கடாசலபுரத்தில் நடந்த தேனி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டியில் தேனி என்.எஸ். ஆண்கள் பள்ளி அணி வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வானது. பள்ளிக்கல்வித் துறை விளையாட்டு பிரிவின் சார்பில் தேனி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டிகள் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடந்து வந்தது. இதில் தேனி மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான 14 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவிற்கான போட்டிகள் தேனி அருகே விசிபுரம் எனப்படும் வெங்கடாசலபுரத்தில் நடந்தது.

இப்போட்டியில் தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, இந்த அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற அணிக்கு தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன், தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தேனி ஹாக்கி விளையாட்டு சங்க செயலாளரும்தேனி நகர் மன்றத் துணைத் தலைவருமான வக்கீல்.செல்வம் ஆகியோர் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

The post தேனி அருகே வெங்கடாசலபுரத்தில் பள்ளிகளுக்கிடையேயான ஹாக்கி போட்டி appeared first on Dinakaran.

Related Stories: