சில்லி பாயின்ட்…

* மகாராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன் குவித்துள்ளது. 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே 127 ரன், ஷ்ரேயாஸ் அய்யர் 45 ரன்னுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக, மகாராஷ்டிரா 126 ரன்னுக்கு சுருண்டது.

* புதுச்சேரி அணிக்கு எதிராக பாண்டியில் நடக்கும் ரஞ்சி பி பிரிவு போட்டியில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்துள்ளது (யஷ் ரத்தோட் 118, கேப்டன் அக்‌ஷய் வாத்கர் 31, ஹர்ஷ் துபே 69*).

* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் 2வது அரையிறுதியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்தது. அடுத்து 20 ஓவரில் 129 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்த்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியா 20 ஓவரில் 134/5 (மூனி 44, கேப்டன் தஹ்லியா 27, பெர்ரி 31, லிட்ச்பீல்டு 16*); தென் ஆப்ரிக்கா 17.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 135 (கேப்டன் லாரா வுல்வார்ட் 42, பிரிட்ஸ் 15, அன்னெகே போஷ் 74*). இறுதிப் போட்டி துபாயில் நாளை நடக்கிறது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: