நில முறைகேடு வழக்கு தொடர்பாக மூடா அலுவலகத்தில் ஈடி ரெய்டு

பெங்களூரு: மூடா முறைகேடு வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத்துறை, மைசூருவில் உள்ள மூடா அலுவலகத்தில் ரெய்டு நடத்தி முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை தேடினர். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) அதற்கு மாற்றாக 14 மனையிடங்களை ஒதுக்கிக் கொடுத்தது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விட அதிக மதிப்புள்ள நிலம் நகரின் முக்கியமான மற்றும் ஆடம்பர பகுதிகளில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மூடா முறைகேடு புகாரில் முதல்வர் சித்தராமையாவை விசாரிக்க ஆளுநர் அனுமதியளித்த நிலையில், லோக்ஆயுக்தா, அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறது. மூடா முறைகேடு வழக்கில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை திரட்டும் வகையில், நேற்று 12 அமலாக்கத்துறை அதிகாரிகள் மைசூருவில் உள்ள மூடா அலுவலகம் உட்பட சில இடங்களில் ரெய்டு நடத்தி ஆதாரங்களை தேடினர்.

 

The post நில முறைகேடு வழக்கு தொடர்பாக மூடா அலுவலகத்தில் ஈடி ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: