அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள் வீசிய 6 பேருக்கு ஜாமீன்

திருமலை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள் வீசி கைதான 6 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று முன்தினம் மாலை சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சில மாணவர்கள் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள் மற்றும் தக்காளி வீசி அங்கிருந்த பூத்தொட்டிகளை வீசி உடைத்தனர். இச்சம்பவம் குறித்து நடிகர் அல்லு அர்ஜூனிடம் புகார் பெற்ற ஜூப்லி ஹில்ஸ் போலீசார் மாணவர் சங்கத்தினர் 6 பேரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிபதி முன்னிலையில் போலீசார் நேற்று காலை ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி மூன்று நாட்களுக்குள் ஒவ்வொரு நபரும் தலா ரூ.10,000 பிராமண பத்திரத்துடன் இரண்டு ஜாமீன் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் ஜாமீன் வழங்கினார்.

நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள், தக்காளி வீசிய 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை நேற்று நீதிபதி ஜாமீனில் விடுவித்தார். இந்நிலையில் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி கைதாகி ஜாமீனில் விடுதலையான 6 பேரில் 4 பேர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி உள்ளன.

The post அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கற்கள் வீசிய 6 பேருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: