அனைத்து பேருந்திலும் 3 மாதத்தில் மின்னணு டிக்கெட் இயந்திரம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளி லும் அடுத்த 3 மாதங்களில் மின்னணு டிக்கெட் இயந்திரம் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 2010-11 ஆண்டு முதல் மின்னணு பயணச்சீட்டு சாதனங்கள் வாயிலாக பயணச்சீட்டுகள் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. முதலில் நகர பேருந்துகளில், தொடர்ச்சியாக தொலைதூர பேருந்துகளில் பயன்படுத்தப்பட்டது.

தற்போது பெரும்பாலும் பலர் கையில் பணம் வைத்திருக்காமல் மொபைல் போன்களில் யுபிஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.  இதனையடுத்து அரசு பேருந்துகளில் யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்ட் மூலம் பணம் பெற்று டிக்கெட் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்த 2023ம் ஆண்டு முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து எஸ்பிஐ வங்கியிடம் இயந்திரங்களை பெற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 3 மாதங்களில் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரம் பயன்பட்டிற்கு வரும் என்றும், சென்னையில் மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

The post அனைத்து பேருந்திலும் 3 மாதத்தில் மின்னணு டிக்கெட் இயந்திரம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: