2026 தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம்: அமைச்சர் பொன்முடி பேச்சு

விழுப்புரம்: ‘2026 சட்டமன்ற தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம்’ என்று அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார்.  விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாகநிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் யார் வேண்டுமென்றாலும் நிறத்தப்படலாம். ஏன் எனக்கே சீட் கிடைக்காமல் போகலாம். ஆனால் மு.க.ஸ்டாலின் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவருக்காக நீங்கள் எல்லாரும் உழைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் யார் நின்றாலும், அவர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது வீடு வீடாக சென்று திண்ணைப் பிரசாரத்திலும் ஈடுபட வேண்டும். தேர்தலில் 90 சதவீத வாக்குகளை நாம்தான் பெற வேண்டும். எந்த பிரச்சினைகளும் இல்லாமல் நாம் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்றினால் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 2026 தேர்தலில் எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம்: அமைச்சர் பொன்முடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: