அக்.24ம் தேதி வரை ரூ. 1000 பாஸ் பெறலாம் மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 2024 அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரையிலான செல்லத்தக்க, விருப்பம்போல் பயணம் செய்யக் கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை மாதந்தோறும் 7ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும், மாதாந்திர சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், அக்.11ம் தேதி முதல் நவ.10ம் தேதி வரையிலான செல்லத்தக்க, 50 சதவீத மாணவர் சலுகை பயண அட்டை மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை அனைத்து மாநகர போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், அக்.11ம் தேதி முதல் 15ம் தேதி வரை டிக்கெட்கள் விற்பனை செய்யக் கூடிய நாட்களில் ஆயுதபூஜை மற்றும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தொடர் விடுமுறை ஆகிய காரணங்களினால், மாணவர்கள் சலுகை பயண அட்டை 50 சதவீத மாணவர் சலுகை பயண அட்டை, மாதாந்திர சலுகை பயண அட்டை மற்றும் ரூ.1000 பயண அட்டைகள் விற்பனை அக்.24ம் தேதி வரை மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படும். எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி பயன் அடையலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

The post அக்.24ம் தேதி வரை ரூ. 1000 பாஸ் பெறலாம் மாநகர் போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: