பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாய தொழிற்சாலை வருவதில் தவறு இல்லை: அமைச்சர் டிஆர்பி. ராஜா பேட்டி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மினி டைட்டில் பார்க்கில் தொடங்கப்பட்ட ஐடி நிறுவனத்தை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூரில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நியோ டைடல் பார்க்கில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. திறந்த குறுகிய காலத்திலே கம்பெனிகள் அனைத்தும் வந்துவிட்டது. டெல்டா மாவட்ட படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும். அடுத்ததாக தூத்துக்குடியில் நியோ டைட்டில் பார்க் திறக்கப்பட உள்ளது.

செங்கிப்பட்டியில் சிப்காட் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதில் எந்த தவறும் இல்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாத தொழிற்சாலைகள் வரலாம். தஞ்சாவூர் விமான நிலையம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும். தஞ்சாவூரில் இரண்டாவது டைட்டல் பார்க் விரைவில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாய தொழிற்சாலை வருவதில் தவறு இல்லை: அமைச்சர் டிஆர்பி. ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: