பச்சினம்பட்டி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை கலெக்டரிடம் மக்கள் மனு

தர்மபுரி, அக்.15: தர்மபுரி மாவட்டம், பச்சினம்பட்டி ஊர் பொதுமக்கள், நேற்று கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பச்சினம்பட்டியில் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பச்சினம்பட்டி பஸ் ஸ்டாப்பில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் பஸ்சில் பயணம் செய்கின்றனர். பச்சினம்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்த நிழற்கூடத்தை மர்ம நபர்கள், கடந்த 2017ம் ஆண்டு இடித்து விட்டனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தோம். இதுவரை இடிக்கப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பஸ் பயணம் செய்ய பச்சினம்பட்டி பஸ் ஸ்டாப்பிற்கு வரும் பயணிகள் மழை, வெயிலில் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், மீண்டும் பச்சினம்பட்டி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post பச்சினம்பட்டி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை கலெக்டரிடம் மக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: