தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் வானூர்தி மற்றும் இயந்திரவியல் பொறியியல் சங்கம் தொடக்கம்

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வானூர்தி பொறியியல் மற்றும் இயந்திரவியல் பொறியியல் துறை சங்கம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் பி.மணி முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் ராதிகா கொகண்டி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி விஜயகோபால் கலந்துகொண்டு, வானூர்தி பொறியியல் மற்றும் இயந்திரவியல் துறையின் அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள், தொழில்நுட்பத்துறையில் அதனுடைய தாக்கங்கள் குறித்தும், அணுசக்தி துறையில் வேலை வாய்ப்புகள் குறித்தும் விரிவாக பேசினார். இதில் பொற்செல்வன் ராஜ்திலக் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் ராஜசேகரன் நன்றி கூறினார்.

The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் வானூர்தி மற்றும் இயந்திரவியல் பொறியியல் சங்கம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: