10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு

சென்னை: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை வெளியிடுகிறார். தமிழக மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை மாநிலத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. 2023- 24ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதியுடன் முடிந்தது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதேபோல 11ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4ல் தொடங்கிய நிலையில், மார்ச் 25ம் தேதியோடு நிறைவடைந்தது. தொடர்ந்து 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26ல் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டுக்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் 14ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

The post 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: