இந்தியாவில் முதன்முறையாக ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி :டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

ராமநாதபுரம் : இந்தியாவில் முதன்முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ. 42 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அரசின் 2024-2025-ம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டில் ராமநாதபுரம் பிரப்பன்வலசை பகுதியில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஒலிம்பிக் கடல்சார் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

படகு நிறுத்தும் இடம், கட்டுப்பாட்டு மையம், work shop, உடற்பயிற்சி கூடம், யோகா மையம், பொருட்கள் வைக்கும் அறை, தங்கும் அறை, உணவுக் கூடம் ஆகியவைகள், இவ்விளையாட்டு அகாடமியில் அமைய உள்ளன.இதில் பாய்மரப்படகு, மரத்தான் நீச்சல் உள்ளிட்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், அகாடமி கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கிய நாளிலிருந்து, 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

The post இந்தியாவில் முதன்முறையாக ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி :டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.

Related Stories: