சென்னை: பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் மருமகனும்-அரசியல் மேதை முரசொலி மாறனின் சகோதரரும் தலைசிறந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம் நேற்று (அக். 10) காலை மறைவெய்தினார். கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு கழகத்தின் கொள்கை பரப்பியவரும்-இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவருமான முரசொலி செல்வம் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு கட்சி அமைப்புகள் அனைத்தும் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
The post முரசொலி செல்வம் மறைவு மூன்று நாட்களுக்கு கட்சி கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும்: துரைமுருகன் அறிக்கை appeared first on Dinakaran.