ஜீயபுரம் போலீசில் சீமான் மீது புகார்


திருச்சி: திருச்சி ஜீயபுரம் போலீசில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி குழுமணி சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன்(70). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று ஜீயபுரம் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், கடந்த 16ம் தேதி அல்உம்மா இயக்க தலைவர் பாஷா இறந்ததையடுத்து, துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சீமான், சுப்ரீம் கோர்ட்டை தரக்குறைவாக விமர்ச்சித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்ற போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஜீயபுரம் போலீசில் சீமான் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: