டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிகள்

சென்னை: சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் 12 இல்லங்களில் டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி வளாகத்தில் உலக பார்வை தினத்தையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது டாக்டர்காள் சௌந்தரி, கற்பகம் தாமோதரன், மஞ்சுளா ஜெயக்குமார் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி, சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் 12 இல்லங்களில் 400க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கண் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ள உள்ளது. அத்துடன் தேவை இருப்பவர்களுக்கு கண் கண்ணாடிகளையும் இலவசமாக வழங்க உள்ளோம். அக்டோபர் 31ம் தேதி வரை மாநகரில் உள்ள அதன் அனைத்து கிளினிக்குள் மற்றும் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு விரிவான கண் பரிசோதனைகளை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை கட்டணமின்றி இலவசமாக மேற்கொள்கிறது.

இதில் பங்கேற்று பயனடைய 9594924048 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்தியாவில் 0-15 வயது பிரிவிலுள்ள 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைப் பார்வைத் திறனற்றதாக இருக்கிறது, கண்கள் விலைமதிப்பற்றவை என்பதை குழந்தைகளும், சிறார்களும் புரிந்துகொள்வது அவசியம். வெளியில் செல்லும்போது குளிர் கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாத்துக் கொள்வதும், டவல்கள் அல்லது கண் சொட்டு மருந்துகள் போன்ற தனிப்பட்ட பொருட்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதும் அவசியம். கேரட்டுகள் மற்றும் இலைகள் கொண்ட காய்கறிகள் மற்றும் கீரைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் அவர்களது பார்வைத்திறனை அவர்கள் வலுப்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிகள் appeared first on Dinakaran.

Related Stories: