ஊத்தங்கரை, அக்.9: ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி ஊராட்சி குருக்கப்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் மயானத்திற்கு இடம் ஒதுக்க கோரி, வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊத்தங்கரையில் இருந்து ஓலப்பட்டி செல்லும் பிரதான சாலையிலிருந்து குருகப்பட்டி தார் சாலையின் அருகே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. மேற்கண்ட இடத்தில் இறந்து போனவர்களின் சடலத்தை அடக்கம் செய்யவோ, தகனம் செய்துகொள்ள இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post ஊத்தங்கரை அருகே மயான வசதி கோரி மனு appeared first on Dinakaran.