ஊத்தங்கரை, டிச.18: ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை 19.60 அடி உயரம் கொண்ட அணையில், தற்பொழுது நீர் 17.78 அடியாக உள்ளது. அணையின் நீர்வரத்து பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், நீர்வரத்து சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அணைக்கு 360கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி, அப்படியே அந்த நீரை மதகின் வழியாக வெளியேற்றம் செய்யப்படுகிறது.
The post பாம்பாறு அணைக்கு நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.