இளம்பெண்கள் மாயம்

கிருஷ்ணகிரி, டிச.21: வேப்பனஹள்ளி பந்திகுறி பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 17ம் தேதி மதியம், வீட்டில் இருந்து வெளியே சென்வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை வேப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதில், பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வேலூரை சேர்ந்த சசிதரன் என்பவரும் தனது மகளும் காதலித்து வந்தனர். இதனால் அவர் அழைத்து சென்றிருக்கலாம் எனவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், கெலமங்கலம் ஜே.காருப்பள்ளி பகுதியை சேர்ந்த 22வயது இளம்பெண் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து வெளியே சென்ற வர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை, கெலமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post இளம்பெண்கள் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: