முள்ளங்கி விலை உயர்வு

ஓசூர், டிச.20: ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓசூர் அருகே ஒன்னல்வாடி, பாகலூர், உத்தனப்பள்ளி, ஆவலப்பள்ளி, கெலவரப்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குறுகிய காலத்தில் விளையும் முள்ளங்கி, தக்காளி, கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறி பயிர்களை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடையாகும் காய், கீரைகள் பெங்களூரு, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில், குறிப்பாக 45 நாட்களில் அறுவடை செய்யும் முள்ளங்கி இப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஓசூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமாகவும், கனமழையாகவும் அவ்வப்போது மழை பெய்து வந்ததது. இதனால் முள்ளங்கி சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இருந்ததால் முள்ளங்கி தரமாக விளைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் தனியார் கார்ப்பரேட் நிறுவன கடைகளுக்கு கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். தோட்டத்தில் ஒரு கிலோ ₹20 முதல் ₹25க்கு வாங்கி, கார்ப்பரேட் கடைகளில் ₹35 முதல் ₹40க்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல், உழவர் சந்தையிலும் ₹35 முதல் ₹40க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post முள்ளங்கி விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: