ஓசூர், டிச.18: ஓசூர் வட்டார வள ைமயத்தில் நேற்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணிக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை வகித்தார். வட்டார வளமையம் மேற்பார்வையாளர் குமரவேல் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பேரணியின் போது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியில் மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் பசவராஜ், சிறப்பாசிரியர் பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்திருந்தனர்.
The post மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.