சென்னை: வி.சி.க., சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ மாபெரும் வெற்றி மாநாடாக அமைந்தது. விசிகவின் வெல்லும் சனநாயகம் மாநாட்டையே வெல்லும் மாநாடாக இம்மாநாடு அமைந்தது.
2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இம்மாநாட்டில் பங்கேற்றது கூடுதல் சிறப்பு. மாநாட்டில் பங்கேற்ற மகளிர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த தோழமை இயக்கங்களின் தலைவர்களுக்கும் குறிப்பாக மகளிர் அணி தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும் என்று கூறினார்.
The post விசிக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும்: திருமாவளவன் appeared first on Dinakaran.